Published : 22 May 2017 10:04 AM
Last Updated : 22 May 2017 10:04 AM

கூகுள் லென்ஸ்

கூகுள் லென்ஸ்

கூகுள் நிறுவனம் புதிதாக செயலி மூலம் இயங்கும் கூகுள் லென்ஸ் என்கிற வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய வசதியில் ஒரு இடத்தை கூகுள் லென்ஸ் மூலம் புகைப்படம் எடுத்தால், உடனடியாக அந்தப் பகுதி குறித்த விவரங்களை கூகுள் அளிக்கும். ஒரு பூ குறித்த விவரம் வேண்டும் என்றால், கூகுள் லென்ஸ் மூலம் அந்த பூவை புகைப்படம் எடுக்க வேண்டும். உடனடியாக கூகுள் விவரத்தை அளிக்கும். குரல் வழி சேவையைப்போல இந்த புதிய தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்ய உள்ளது.

வியர்வையை உறிஞ்சும் ஆடை

உடற்பயிற்சி செய்பவர்களை அசெளகர்யமாக உணரச் செய்வது வியர்வை. இதற்காகவே அடிக்கடி வியர்வையை துடைத்துக் கொண்டு திரும்பவும் தொடர்வார்கள். அதற்கான தீர்வாக வியர்வையை உறிஞ்சிக்கொண்டு, உடலின் வெப்பநிலையை சீராக வைக்கும் ஆடையை வடிவமைத்துள்ளனர். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள். இந்த ஆடை நுண்ணுயிரிகள் செறிவூட்டப்பட்ட நூலிழை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x