நோக்கியா பெயரைக் கைவிடுகிறது மைக்ரோசாப்ட்

நோக்கியா பெயரைக் கைவிடுகிறது மைக்ரோசாப்ட்
Updated on
1 min read

தங்களது லூமியா மொபைல் ஃபோன்களில் இருக்கும் நோக்கியா என்ற பெயரை நீக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நோக்கியா பிரான்ஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. மேற்கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு, 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஃபின்லாண்டு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கியது. ஆனால் நோக்கியா என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

நோக்கியா தொழில்நுட்ப நிறுவனமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நோக்கிய என்ற பெயரையும் அந்நிறுவன உரிமையாளர்களே தக்கவைத்துள்ளனர். அந்தப் பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் மைக்ரோசாப்டிடம் உள்ளது.

புதிதாக பதவியேற்றுள்ள மைக்ரோசாப்டின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ள, மைக்ரோசாப்டின் ஃபோன் தயாரிப்பை பெரியளவில் கட்டுப்படுத்தியுள்ளார். இதனால் சமீபத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட 18,000 மைக்ரோசாப்ட் ஊழியர்களில் 12,500 ஊழியர்கள் ஃபோன் தயாரிப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in