மேலும் ஒரு ஃபயர்பாக்ஸ் போன்

மேலும் ஒரு ஃபயர்பாக்ஸ் போன்
Updated on
1 min read

ஸ்மார்ட்போன் அறிமுகப் பிரிவில் மேலும் ஒரு புது வரவாக அல்கேடல் ஒன் டச் (Alcatel OneTouch) நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. மோசில்லாவுடன் இணைந்து இந்த ஃபயர்பாக்ஸ் போனை அலாக்டல் ரூ.1990 விலைக்குக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே குறைந்த விலையிலான பயர்பாக்ஸ் ஸ்மார்ட்போனை ஸ்பைஸ் மற்றும் இண்டெக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளன.

இந்த போன் மின்வணிக தளமான பிளிப்கார்ட் மூலம் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 3.5 இன்ச் திரை, 1 GHz பிராசஸர் மற்றும் 1.3 மெகா பிக்சல் கேமரா கொண்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக, ஸ்மார் ட்போன் பயனாளிகளை ஈர்க்கும் வகையில் சமீபத்தில் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in