தளம் புதிது: உலக வானொலிகளைக் கேட்டு ரசிக்க...

தளம் புதிது: உலக வானொலிகளைக் கேட்டு ரசிக்க...
Updated on
1 min read

இணைய யுகத்திலும் வானொலிகளுக்கான தேவை இருப்பது மட்டுமல்ல, இணையம் மூலம் வானொலிகளைக் கேட்டு ரசிப்பதும் எளிதாகியிருக்கிறது. இதற்கு உதாரணமாகத் திகழும் சேவைகளில் ‘ரேடியோ.கார்டன்' தளமும் ஒன்று. வானொலிச் சேவை தொடர்பான மற்ற தளங்களைவிட இந்தத் தளம் மிகவும் எளிமையானது. இந்தத் தளத்தில் உலகில் உள்ள எந்த வானொலி நிலையத்தை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம். வானொலி நிலையத்தைத் தேடுவது மிகவும் சுலபம். தளத்தின் முகப்புப் பகுதியில் கூகுளின் பூமி வரைபடச் சேவை தோன்றுகிறது. அதில் விரும்பிய நாட்டின் பகுதியில் கிளிக் செய்தால் அங்குள்ள வானொலியைக் கேட்கலாம். இந்தச் சேவையை கிளிக் செய்ததுமே நம்முடைய இருப்பிடத்தை உணர்ந்து, அங்குள்ள வானொலிச் சேவையை அடையாளம் காட்டுகிறது. இதே முறையில் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வானொலியைக் கேட்கலாம். இது தவிர, வரலாற்று வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு ரசிக்கலாம். விளம்பரங்களையும் கதைகளையும் கேட்டு ரசிக்கும் வசதி இருக்கிறது. இணைய முகவரி: http://radio.garden/live/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in