தளம் புதிது: ஜிப்களை உருவாக்க உதவும் கூகுள் தளம்

தளம் புதிது: ஜிப்களை உருவாக்க உதவும் கூகுள் தளம்
Updated on
1 min read

அலுப்பூட்டும் தகவல்களையும், தரவுகளையும் சுவாரசியமான அசையும் படங்களாக மாற்றும் வகையிலான ஓர் இணையதளத்தைத் தேடியந்திர நிறுவனமான கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

‘டேட்டாஜிஃப்மேக்கர் வித் கூகுள்’ எனும் இந்த இணையதளத்தின் மூலம் பலவகையான புள்ளிவிவரங்கள் சார்ந்த தகவல்களை ஜிஃப் வடிவிலான அசையும் சித்திரங்களாக மாற்றித்தருகிறது. வாக்கெடுப்பு விவரங்கள், திரைப்பட ரேட்டிங் பட்டியல், விற்பனை விவரங்கள் போன்ற தகவல்களை இதன் மூலம் ஜிஃப் வடிவில் உருவகப்படுத்தலாம்.

பயனாளிகள் தங்கள் வசம் உள்ள தகவல்களைச் சமர்ப்பித்து, அவற்றை ஒப்பிட வேண்டிய முறையையும் குறிப்பிட்டால் ஜிஃப் வடிவில் மாற்றித் தருகிறது இந்தத் தளம். ஜிஃப்பில் இடம்பெறும் வண்ணங்களையும் தேர்வு செய்யலாம். அறிமுக வாசகங்களையும் இதனுடன் இணைக்கலாம். செய்தியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினருக்கு இந்தத் தளம் பயனுள்ளதாக இருக்கும்.

இணைய முகவரி:>https://datagifmaker.withgoogle.com/edit

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in