Published : 27 Jun 2016 10:32 AM
Last Updated : 27 Jun 2016 10:32 AM

பவர் பேங்க் + போன் கவர்

பவர் பேங்க் + போன் கவர்

தொலைத்தொடர்பு சிக்னலை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போன் கவர் மற்றும் பவர் பேங்க். சிக்னல் குறைவாக உள்ளது என்று கவலைப்பட தேவையில்லை. பவர் பேங்காகவும் பயன்படுத்தலாம். அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும்.

சிறிய ஃவூபர்

ஹெட்போனில் இசை கேட்பவர்களுக்கு ஃவூபர் கருவி இல்லாதது குறையாகத்தான் இருக்கும். அதைப் போக்குகிறது இந்த ரிஸ்ட்பேண்ட் ஃவூபர். ஹெட்போனில் இசையை கேட்கிறபோது இதனையும் இணைத்துக் கொண்டால் முழுமையாக ரசிக்கலாம்.

மேஜிக் அட்டை



எல்லா வகையான இடத்திலும் ஒட்டிக் கொள்ளும் அட்டை இது. ஐ-மார்வெல் என்கிற இந்த அட்டையை சுவற்றில் ஒட்டவைத்து விட்டு அதில் செல்போனை வைத்தால் தாங்கிக் கொள்ளும். ரிமோட் போன்றவற்றையும் வைத்து எடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x