

மென்பொருள் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே வலைதளங்கள் முடங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பிரபல சமூக வலைத்தளங்களான >ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் சுமார் அரை மணி நேரம் முடங்கியது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட முடக்கத்துக்கு காரணம், ஹேக்கர்களின் அத்துமீறல் அல்ல என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல கோடி பயனர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் இன்று மதியம் திடீரென முடங்கியன.
சமீப காலமாக இணையத்தில் பல முக்கியத் தளங்களை முடக்கிய ஹாக்கர்கள் குழுவே இதற்கும் காரணம் என்று தகவல் பரவிய நிலையில், லிசார்ட் குரூப் என்ற ஹாக்கர் குழு, இது தங்களால் நிகழ்த்தப்பட்ட முடக்கம்தான் என ட்விட்டரில் பகிர்ந்தது. இதை ஃபேஸ்புக் மறுத்துள்ளது.
"இது வெளியிலிருந்து யாரும் செய்த வேலை அல்ல. எங்கள் மென்பொருள் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சிறு மாறுதலால் நிகழ்ந்தது. தற்போது இரண்டு தளங்களும் 100 சதவீதம் பயன்பாட்டில் உள்ளது" என ஃபேஸ்புக் அறிக்கை விடுத்துள்ளது.