

ஓரிகாமி ஸ்பூன்
ஓரிகாமி கலையை அடிப்படையாகக் கொண்ட ஸ்பூன், வடிகட்டி போன்றவற்றை தயாரித்துள்ளது ஒரு நிறுவனம். சாதாரண அட்டைகளை போல உள்ளது. தேவையான நேரத்தில் மடக்கி பயன்படுத்தலாம். இடத்தை அடைத்துக் கொள்வதில்லை.
பாப்-அப் விரிப்பு
கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் துண்டு விரித்து அமர்வதற்கு பதிலாக இந்த பாப்-அப் விரிப்பை பயன்படுத்தலாம். ஈரமாகாது, மணலையும் எளிதில் உதறலாம். மிருதுவாக இருப்பதால் குழந்தையை படுக்க வைக்கவும் பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட் நோட்புக்
அலுவலக வேலைகளைக் குறிப்பெடுக்கும் நோட்டில் நாம் மறந்துவிடும் நமது அன்றாட செயல்களை ஞாபகப்படுத்தும் விவரங்களும் உள்ளன. அவற்றை டிக் செய்வதன் மூலம் அலுவலக வேலைகளுடன், அன்றாட வேலைகளும் செய்துவிடலாம்.