

இணையம் மூலமே காலண்டர்களை உருவாக்கிக்கொள்ளலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதற்கான உதவி உங்களுக்குத் தேவைப்பட்டால் 'காலண்டர்பீடியா' தளத்தை நாடலாம். இந்த இணையதளம் காலண்டர்களுக்கான களஞ்சியமாகச் செயல்படுகிறது.
இந்தத் தளத்தில் விதவிதமான காலண்டர்களை உருவாக்கிக்கொள்ளலாம். காலண்டர்கள் வேர்டு கோப்பாக அல்லது பிடிஎஃப், எக்செல் கோப்பாக அமைத்துக் கொள்ளலாம். மாத காலண்டர், வார காலண்டர் என எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.
நிதி ஆண்டு அடிப்படையிலான காலண்டர் உட்பட உங்கள் தேவைக்கு ஏற்ற வடிவங்களையும் தேர்வு செய்துகொள்ளலாம். தினசரி செயல்களைத் திட்டமிடுவதற்கான காலண்டர் வடிவமும் இருக்கிறது. இத்தனை வகை காலண்டர்களா எனும் வியப்பை ஏற்படுத்துகிறது இந்தத் தளம்.
இணைய முகவரி: >http://www.calendarpedia.com/