இளமை நெட்: ஆங்கிலம் அறிவோம் வாருங்கள்

இளமை நெட்: ஆங்கிலம் அறிவோம் வாருங்கள்
Updated on
1 min read

ஆங்கில மொழி தொடர்பான சொல் வங்கியைக் கொஞ்சம் மேம்படுத்திக்கொள்ள விரும்பினால் புருப்ரீடிங் சர்வீசஸ் உருவாக்கியுள்ள இன்போகிராபிக்கை புக்மார்க் செய்துகொள்வது நல்லது. நீங்கள் விரும்பினால் இந்த வரைபடச் சித்திரப் பக்கத்தை அப்படியே அச்சிட்டும் வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு எப்போதெல்லாம் ‘மிகவும்’ எனும் வார்த்தையை ஆங்கிலத்தில் பயன்படுத்த தோன்றுகிறதே அப்போது இதில் உள்ள பட்டியலைப் பார்த்துப் பொருத்தமான மாற்று வார்த்தையைத் தெரிந்துகொண்டு கச்சிதமாகப் பயன்படுத்தலாம்.

மிகவும் எனும் பொருள்படும் வெரி எனும் ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்த வேண்டிய இடங்களில் கையாளக்கூடிய அதைவிடப் பொருத்தமான சொற்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆங்கிலத்தில் மிகச் சரியாக ( very accurate) என்று சொல்வதற்குப் பதிலாகத் துல்லியமாக (exact) எனச் சொல்லலாம். மிகவும் அச்சம் (very afraid) என்பதற்காகப் பயத்துடன் (fearfull) எனச் சொல்லலாம். மிகவும் அலுப்பாக (very boring) என்பதற்குப் பதில் மந்தமாக (dull) என்று சொல்லலாம். இப்படி மிகவும் என்ற சொல்லுடன் பயன்படுத்தக்கூடிய 128 வார்த்தைகளுக்கு அதே பொருளை அதைவிடச் சிறப்பாக வழங்கக்கூடிய அருமையான ஒற்றைச் சொற்களின் பட்டியலாக இந்த வரைபடச் சித்திரம் அமைந்திருக்கிறது.

ஆங்கில மொழிக்காக உருவாக்கப்பட்டுள்ள பட்டியல் என்றாலும், பொதுவில் எந்த மொழியிலும் எழுதும்போதும் அல்லது பேசும்போதும் பின்பற்றக்கூடிய அடிப்படை வழிதான் இது.

ஆங்கில மொழிக்காக உருவாக்கப்பட்டுள்ள பட்டியல் என்றாலும், பொதுவில் எந்த மொழியிலும் எழுதும்போதும் அல்லது பேசும்போதும் பின்பற்றக்கூடிய அடிப்படை வழிதான் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in