

மூளைக்கு உதவும் உணவுகள்
நீங்கள் சாப்பிடும் உணவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், உட்கொள்ளும் உணவுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்பு இருப்பது தெரியுமா? இந்தத் தொடர்பை விளக்கும் வகையில் டெட் கல்வி வீடியோ ஒன்று அமைந்துள்ளது. இந்த வீடியோ உணவு வகைகள் எப்படி மூளையின் செயல்பாட்டின் மீது தாக்கம் செலுத்துகின்றன என்பதை அழகாக விளக்குகிறது.
ஒமேகா 3 மற்றும் 6 ரக ஃபேட்டி ஆசிட்கள் கொண்ட உணவு வகைகள் மூளை விழிப்புடன் செயல்பட உதவுகின்றன. மற்ற வகைக் கொழுப்புகள் நீண்ட கால நோக்கில் பாதிப்பைச் செலுத்தலாம். அதே போல புரதம் மற்றும் அமீனோ ஆசிட்கள் நாம் எப்படி உணர்கிறோம் என்பதில் தாக்கம் செலுத்துகின்றன. அதனால்தான் சில வகை உணவுகள் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன, சில வகை உணவுகள் மந்தமாக உணரச் செய்கின்றன.
உணவின் தாக்கம் பற்றி அறிய: >https://youtu.be/xyQY8a-ng6g