

மல்ட்டி சார்ஜர்
ஒரே நேரத்தில் பல பவர் பேங்குகளுக்கு சார்ஜர் ஏற்றிக் கொள்ளும் கருவி இது. அதுபோல ஒரு பவர் பேங்கிலிருந்து இரண்டு செல்போன்களுக்கு ஒரே நேரத்தில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் சார்ஜரையும் அளிக்கிறார்கள்.
கேஸ் ஸ்டவ் கண்ட்ரோல்
ஸ்மார்ட்போன் மூலம் கேஸ் ஸ்டவ்வை இயக்கும் கருவி. ஸ்டவ்வின் சுவிட்சை கழற்றி விட்டு இந்த சிறு கருவியை பொருத்த வேண்டும். எவ்வளவு நேரத்திற்கு அடுப்பு எரிய வேண்டும் என ஸ்மார்ட்போனில் நேரம் குறித்துவிட்டால் கருவி அலாரம் அடிக்கும்.
எல்இடி ஆடை
செல்ல பிராணிகளுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பவர்களை ஈர்க்கும் விதமாக வந்துள்ளது இந்த உடை. எல்இடி விளக்குகள் ஒளிரும் வகையிலான இந்த ஆடையை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கலாம். விரும்பும் வண்ணங்களில் ஆடைய ஒளிரச் செய்யலாம்.