Published : 27 Mar 2014 12:00 AM
Last Updated : 27 Mar 2014 12:00 AM

சர்க்கரையில் இருந்து எரிபொருள் தயாரிக்க திட்டம்

பிளாஸ்டிக், காஸோலின், ரப்பர் என்று எதையெடுத்தாலும் திரவ எண்ணெயிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இப்போது இந்த எண்ணெய்க்கு தட்டுப்பாடு வரத் தொடங்கியிருக்கிறது. எனவே ரசாயனத் தொழிலில் அதிகம் பயன் படுத்தப்படும் ஐசோபியூடேன் என்ற அடிப்படை வேதியியல் பொருளைத் தயாரிக்க சர்க்கரையைப் பயன்படுத்த அறிவியல் அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

எரிபொருள்கள், கரைப்பான்கள் போன்ற பல பொருள்களைத் தயாரிக்க ஐசோபியூடேன்களைத்தான் பயன்படுத்துகின்றனர். எண் ணெய்க்குப் பதிலாக சர்க்கரையைப் பயன்படுத்துவதில் உள்ள வசதி, இதை எவ்வளவு வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம் என்பதுதான். சர்க்கரை என்றால் கரும்புச் சாறிலிருந்து எடுக்கப்படுவது மட்டுமல்ல, சாதாரண மரங்களிலிருந்தும் வைக்கோலி ிருந் தும்கூட எடுக்கப்படுவது.

ஜெர்மனியில் உள்ள பிரான் ஹோஃபர் ரசாயன, உயிரித் தொழில்நுட்ப நடைமுறை மையத்தில் இந்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. சர்க்கரையிலிருந்து எரிபொருள் தயாரிக்கப்படுவதால் மக்களுக்கு சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக வைக்கோல், மரம் போன்றவற்றிலிருந்தும் சர்க்கரையைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சர்க்கரையை மிக நுண்ணியிரியுடன் சேர்க்கும்போது அது சர்க்கரையை ஜீரணித்து வாயு வடிவில் ஐசோபூடேனை வெளிவிடுகிறது. இப்படித்தான் ஐசோபூடேனைப் பெரும் அளவில் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். ஜெர்மனியின் ஹனோவர் நகரில் ஏப்ரலில் தொழில்துறை கண்காட்சி நடைபெறவிருக்கிறது. அங்கே இந்தத் தொழில்நுட்பம் நேரிலேயே செய்துகாட்டப்படும்.

எரிபொருள் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருவதாலும் பயன்பாடும் விலையும் அதிகரித்து வருவதாலும் புவியின் சுற்றுச்சூழலுக்கு பெட்ரோலிய எரிபொருள்களால் கேடு விளைவிக்கப்படுவதாலும் மாற்று எரிபொருள் தேடலில் எல்லா நாடுகளும் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் இறங்கியுள்ளன. அதன் ஒருபகுதிதான் இந்தக் கண்டுபிடிப்பும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x