

உறுதியான பிளேடு
சாதாரண இரும்பு பிளேடினை விட 5 மடங்கு கூர்மையான பிளேடு. கீசெயினாக பயன்படுத்தலாம். மரங்கள், குச்சிகளை சீவ, மூடிகளை திறக்க என கடின வேலைகளுக்கும் பயன்படுத்தலாம்.
கணினி தலையணை
பழமை விரும்பிகளை ஈர்க்கும் தலையணைகளை வடிவமைத்துள்ளது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம். முதல் கணினி,டிவி, செல்போன் என பல வடிவங்களில் தயாரித்துள்ளது. பாலீதீன் இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நேரம் கணிக்கும் குடுவை
பழமையான தொழில்நுட்பமான நேரத்தை கணிக்கும் மணல் குடுவையை புதுமையாக தயாரித்துள்ளது ஒருஸ்டார்ட் அப். இதில் நேரத்தை கணிக்க அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது.