உயரிய பாதுகாப்புக்காக ஃபேஸ் லாக்-இன் வசதியை பயன்படுத்த பேடிஎம் முடிவு

உயரிய பாதுகாப்புக்காக ஃபேஸ் லாக்-இன் வசதியை பயன்படுத்த பேடிஎம் முடிவு
Updated on
1 min read

தனது தளத்தின் உயரிய பாதுகாப்பு வசதிக்காக டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான பேடிஎம், ஃபேஸ் லாக்-இன் வசதியைப் பயன்படுத்த உள்ளது. இப்போது இந்த முயற்சி சோதனை வடிவில் உள்ளது.

இதுகுறித்துக் கூறியுள்ள பேடிஎம் மூத்த துணைத் தலைவர் தீபக் அபாட், ''புதிய வசதி மூலம் பயனர்கள் தங்களின் போனைப் பார்த்தால் போதும். தளத்துக்குள் நுழைய முடியும். இதன் மூலம் சைபர் தாக்குதல்களைத் தவிர்த்து, உயரிய பாதுகாப்பைப் பெற முடியும்.

இந்த வசதியை விரிவுபடுத்தும் பணியில் எங்களின் குழு இயங்கி வருகிறது. ஃபேஸ் லாக்-இன் மூலம் எளிதாக, விரைவில் பேடிஎம் தளத்துக்குள் நுழைய முடியும். இதன் மூலம் பயனர்களின் தகவல்களைத் திருடும் பிஷிங் தாக்குதல்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்'' என்றார்.

புதிய ஃபேஸ்-லாக் இன் வசதி சுமார் 10,000 தனித்தனி முகங்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. அதன் முடிவு கிட்டத்தட்ட 100 சதவீத துல்லியத் தன்மையைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in