பெண்ணின் பர்ஸில் தீப்பிடித்த கேலக்ஸி நோட் 9: சாம்சங் மீது வழக்கு பதிவு

பெண்ணின் பர்ஸில் தீப்பிடித்த கேலக்ஸி நோட் 9: சாம்சங் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

நியூயார்க்கைச் சேர்ந்த டயானே சங் என்பவரின் பர்ஸில் இருந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 போன் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக டயானே சாம்சங் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

டயானே அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

டயானே ஒரு ரியல் எஸ்டேட் தரகர். அவர் நியூயார்க்கில் உள்ள ஒரு பகுதியில் லிஃப்டில் சென்றுகொண்டிருந்தபோது அவரின் சாம்சங் கேலக்ஸி நோட் 9 போன் அளவுக்கதிகமான சூட்டுடன் இருப்பதை உணர்ந்தார். உடனே பர்ஸில் போனை வைத்த அவர், விசித்திரமான ஒலி வருவதை உணர்ந்தார். போனை எடுக்க முயன்றபோது பர்ஸில் இருந்து புகை வருவதை கவனித்தார். பேகில் இருந்த பர்ஸை எடுக்க முயல்வதற்குள் அவரின் கைகளும் புகையில் மாட்டிக் கொண்டன.

லிஃப்டில் இருந்து வெளியே வந்த அவர், போனை உடனடியாகத் தூக்கி எறிந்தார். ஆனாலும் போன் தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்தது. அந்த வழியாக வந்த ஒருவர் வாளித் தண்ணீருக்குள் போனை அமிழ்த்தித் தீயை அணைத்தார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் லிஃப்டில் தனியாக அவர், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், புகையின் காரணமாக ட்யானேவின் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக சாம்சங் கேலக்ஸி நோட் 7 தீப்பிடித்து எரிவதாகப் புகார்கள் வந்ததை அடுத்து, பேட்டரியில் இருந்த பழுது கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in