

பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று பிரேஸ்லெட். இதுவரை தங்கம், வெள்ளி என்று உலோகத்திலான பிரேஸ்லெட்டுகளை அணிந்து வந்த பெண்கள் இனி சிலிக்கான், இரீடியம் என்று தொழில்நுட்பத்தால் தோய்க்கப்பட்ட பிரேஸ்லெட்களை அணியும் காலம் வந்துவிட்டது.
USB பிரேஸ்லெட், ஜிபிஎஸ் பிரேஸ்லெட் என்று ஏகப்பட்ட வெரைட்டிகளில் பிரேஸ்லெட்கள் இந்திய சந்தையை தொடவுள்ளன.
உதாரணத்துக்கு ‘கஃப்’ எனப்படும் பிரேஸ்லெட் மூலம் நெருக்கடியான நேரத்தில் நெருக்க மானவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும். இதில் ‘மெமி’ எனப்படும் பிரேஸ்லெட்டில் உள்ள சென்சார் உங்கள் மொபைலுக்கு வரும் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் தெரிவிக்கும்படியாக வைப்ரேட்டாகும்.
மேலும் புளூடூத் வசதி கொண்ட பிரேஸ்லெட், புற ஊதா கதிர்களை கண்டறியும் பிரேஸ் லெட்களும் விரைவில் இந்தியச் சந்தையை அடையவுள்ளது.