Last Updated : 31 May, 2019 06:37 PM

 

Published : 31 May 2019 06:37 PM
Last Updated : 31 May 2019 06:37 PM

இரண்டு புதிய மாடல்களில் Oneplus செல்போன்: இளைஞர்களை கவரும் சிறப்பம்சங்கள்

'Oneplus' செல்போன்களில் மேலும் இரண்டு புதிய மாடல்கள் வெளியாகியுள்ளது. 'Oneplus' செல்போன்நிறுவனம் கடந்த மே 14 ஆம் தேதி 'Oneplus7' மற்றும் 'Oneplus7' ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

'Oneplus7' செல்போன் இந்தியாவில் ஜூன் மாதம் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. அதிகாரப்பூர்வமான 'Oneplus’ நிறுவனத்திலும், அமேசான் தளத்திலும் மற்றும் ஒன்ப்ளஸ் சார்ந்த நிறுவனங்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி அளவு என இரண்டு வகைகளில் ஒன்ப்ளஸ் 7 வெளியாகியுள்ளது.

'Oneplus7' செல்போன் சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே:

* டாட் நாட்ச் டிஸ்பிளே (செல்போன் முழுவதுமே டிஸ்பிளே இருக்கும்)   

* 6.41-இன்ச்

* போன் பின்புறம் கொரில்லா கிளாஸ் 6 பொருத்தப்பட்டுள்ளது. (இதனால் போன் கீழே விழுந்தால் உடையும் வாய்ப்பு குறைவு).

வகை-1: 128 ஜிபி மெமரி

டிஸ்பிளே:  19.5:9 திரை விகிதம், 402 பிபிஐ பிக்சல் டென்சிடி 

                   6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வசதிக் கொண்ட மொபைலின்  விலை- ரூ. 32,999 .

வண்ணங்கள்: வகை-1ல் சாம்பல் நிறத்தில் மட்டும் வெளியகவுள்ளது. (Mirror Grey)

வகை-2: 256 ஜிபி மெமரி

டிஸ்பிளே:  19.5:9 திரை விகிதம், 402 பிபிஐ பிக்சல் டென்சிடி 

                   8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வசதிக் கொண்ட மொபைலின்  விலை- ரூ. 37,999

வண்ணங்கள்: வகை-2ல் மட்டும் இரண்டு வண்ணங்கள் உள்ளது. சாம்பல் நிறம் மற்றும் சிவப்பு நிறம் ஆகிய இரண்டு  நிறத்தில் வெளியாகவுள்ளது.  ( Mirror Grey,Red)

செயலி:  அண்ட்ராய்ட் 9.0 பை, ஆக்சிஜன் ஓ எஸ், ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர்

கேமராக்கள் : பின்புற கேமரா - முதன்மை கேமரா 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் 2 கேமராக்கள், முன்புறம் செல்ஃபி கேமரா - 16 மெகாபிக்சல்

பேட்டரி: 3700-MAh (இரண்டு நாள் தாங்கும் வசதி)

                டைப்-C சார்ஜர் போர்டு.

                அதிவேக வார்ப் சார்ஜர் 20(5V/ 4A)

ஹெட்போன் ஜாக்: வழக்கம்போல் 3.5mm இல்லை.

அதற்கு பதிலாக டைப்-C யில் தான் உபயோகப்படுத்த வேண்டும்.

இதற்கு முன் வந்த மாடல் 'Oneplus 6T’- க்கும் 'Oneplus7'  பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை ஒரே மாதிரியான டிஸ்பிளே அதே டாட் நாட்ச். பின் புரத்தில் கேமரா மட்டும் வெளிபுரம் வந்துள்ளது. வடிவமைப்பை சிறிது மாற்றியுள்ளார்கள்.  விளை 33,000 ஆகும் .

இரண்டு செல்போன்களிலும் பல வசதிகள் இருந்தாலும், விலை சற்றுக்கூட என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x