

ஜூலை 17 -ம் தேதி இந்திய சந்தைக்கு வருகிறது ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ.
ரெட்மி நிறுவனம் ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ ஆகிய மொபைல்களை உலகின் வேகமான ஸ்மார்ட்போன்கள் என்று விளம்பரப்படுத்தி வருகிறது.
இந்த இரண்டு மொபைல்களும் முதலில் சீனாவில் விற்பனைக்கு வந்தன. இந்தியாவில் இந்த மொபைல்களின் பெயர்கள் விற்பனையின் போது மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
இந்தியாவில் இந்த மொபைல்கள் என்ன விலையில் விற்கப்படும் என்று இன்னும் தெளிவாகவில்லை.
சீனாவில் ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோவின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் :
ரெட்மி K20 ப்ரோ நான்கு வகைகளில் வெளியாகியுள்ளது
6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு - 2,499 யுவான் - ரூ. 25,000
6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு அளவு - 2,599 யுவான் - ரூ. 26,000
8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு அளவு - 2,799 யுவான் - ரூ. 28,000
8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு அளவு - 2,999 யுவான் - ரூ. 30,000
ரெட்மி K20 இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது
6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு அளவு - 1,999 யுவான் - ரூ. 20,200
6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு அளவு - 2,099 யுவான் - ரூ. 21,200
ரெட்மி K20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
டிஸ்பிளே:
* 6.39 இன்ச் 1080x2340 பிக்சல்கள்
* அமொலெட் டிஸ்பிளே (AMOLED Display)- வளைவாக இருக்கும்
* திரை முழு உடல் விகிதம் - 91.9 சதவிகிதம்
* பாப் அப் கேமரா இருப்பதால் டாட் நாட்ச் டிஸ்பிளே இல்லை.
* திரை விகிதம் 19.5:9
* இன் டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் இருக்கிறது
கேமராக்கள் :
* பின்புற கேமராக்கள் - முதன்மை கேமரா 48 மெகாபிக்சல், 13 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என மூன்று கேமராக்கள் உள்ளது.
* முன்புறம் செல்ஃபி கேமரா - 20 மெகாபிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா உள்ளது.
பேட்டரி:
* 4000-MAh (இரண்டு நாள் வரை தாங்கும்)
* 27 வாட் அதிவேக சார்ஜர்
* டைப்-C சார்ஜர் போர்டு
ஹெட்போன் ஜாக்:
3.5mm
செயலி:
ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர், அல்டினோ 640 ஜிபியு
வண்ணங்கள்:
நீலம் , சிவப்பு, மற்றும் கருப்பு (Glacier Blue, Flame Red, Carbon Fiber Black)
ரெட்மி K20 அம்சங்கள்:
ரெட்மி K20 யும் கிட்டதட்ட ரெட்மி K20 ப்ரோ அளவுக்கு சமமானது தான். இதில் ப்ராசஸர் ஸ்னேப்ட்ராகன் 730, 18 வாட் சார்ஜர் மற்றும் இரண்டு வண்ணங்களில் வெளியாக உள்ளது.
ரெட்மி K20 ப்ரோவை விட ரெட்மி K20 விலை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. மற்றபடி ரெட்மி K20, K20 ப்ரோவிற்கும் பெரியளவு வித்தியாசங்கள் இல்லை
வண்ணங்கள்:
நீலம், சிவப்பு ( Glacier Blue, Flame Red).