

நோக்கியாவின் 8110 ரக போன் மாதிரியை நினைவிருக்கிறதா? இந்த மாதிரி மறு அவதாரம் எடுத்திருக்கிறது. நோக்கியாவின் பெயரைப் பயன்படுத்தும் உரிமை பெற்றுள்ள எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்த போனை மீண்டும் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹாலிவுட் படமான மேட்ரிக்ஸ் படத்தில் இடம்பெற்றதன் மூலம் பிரபலமான இந்த போன் சற்றே வளைந்த வடிவத்தைக் கொண்டிருந்தது.
அதே வடிவில் 4ஜி கேமரா வசதியுடன் மே மாதம் முதல் இந்த போன் சந்தைக்கு வருகிறது. அண்மையில் நடைபெற்ற மொபைல் மாநாட்டில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனில் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தலாம். ஆனால், வாட்ஸ் அப் வசதி கிடையாது.