தளம் புதிது: தினம் ஒரு கிரிப்டோ நாணயம்

தளம் புதிது: தினம் ஒரு கிரிப்டோ நாணயம்
Updated on
1 min read

இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலம். அதன் மதிப்பு உச்சத்தைத் தொட்டதுதான் பிரபலத்துக்கு முக்கியக் காரணம். அதன் பிறகு பிட்காயின் மதிப்பு ஏறி, இறங்கிக்கொண்டிருந்தாலும் பலருக்கும் இந்த நாணயம் பற்றி அறியும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பிட்காயின் மட்டும் இணைய நாணயம் அல்ல, அதுபோலவே நூற்றுக்கணக்கான கிரிப்டோ நாணயங்கள் இருக்கின்றன. இந்த நாணயங்கள் பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினால், ‘ஏ கிரிப்டோ எ டே’ இணையதளத்தை நாடலாம். இந்தத் தளம் தினம் ஒரு கிரிப்டோ நாணயம் பற்றித் தகவல் தருகிறது. அந்த நாணயத்தின் பெயர், தனித்தன்மை, செயல்படும்விதம், அதன் ஆதாரத் தொழில்நுட்பம் உள்ளிட்ட தகவல்களை விரிவாக வழங்குகிறது. உதாரணத்துக்கு ஆரகன் எனும் கிரிப்டோ நாணயம் பற்றி அறிந்துகொள்ளலாம். இந்தத் தகவல்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு.

இணைய முகவரி: https://acryptoaday.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in