Published : 16 Mar 2018 04:57 PM
Last Updated : 16 Mar 2018 04:57 PM

20000mAh வரை திறன் கொண்ட பவர் பேங்குகள்: ஜீப்ரானிக்ஸ் அறிமுகம்

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் ZEB-PG10000D, ZEB-PG15000D, ZEB-PG20000D ஆகிய மூன்று புதிய பவர் பேங்க் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்ஈடி டிஸ்பிளே மற்றும் எல்ஈடி டார்ச் ஆகிய அம்சங்களுடன் இருக்கும் இந்த மாடல்கள் முறையே 10000 mAh, 150000 mAh மற்றும் 20000 mAh திறன்கள் கொண்டது. மிகத் துரிதமாக சார்ஜ் ஏற்றும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.  டிஸ்பிளே மூலம் பவர் பேங்கில் எவ்வளவு சார்ஜ் மீதமுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

மேலும்,. ஷார்ட் சர்க்யூட், உள்ளீடு/ வெளியீடு ஷார்ட், அதிக சார்ஜ் ஏறுதல் மற்றும் அதிக சார்ஜ் குறைதல் முதலிய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

ZEB-PG10000D மாடலின் விலை ரூ.2,499, ZEB-PG15000D மாடலின் விலை ரூ.3,399 மற்றும் ZEB-PG20000D மாடலின் விலை ரூ.4,399.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x