

தேடியந்திர நிறுவனமான கூகுளின் நூற்றுக்கணக்கான துணை சேவைகளில் சிறிது சர்ச்சைக்குரியது என்றாலும், மிகவும் சுவாரசியமானது கூகுள் ஸ்டீரிட் வீயூ சேவை. உலகின் முக்கிய நகரங்கள், நினைவுச் சின்னங்களை கூகுள் வரைபடத்தின் மீது, 360 கோணத்திலான காட்சிகளாகப் பார்த்து ரசிக்க இது உதவுகிறது.
அமேசான் மழைக்காடுகள், பனிப் பிரதேசத்துத் துருவக் கரடிகள், ஆக்ராவின் தாஜ்மகால், இமையமலைச் சிகரம் எனப் பலவற்றை ஸ்டீரிட் வியூ சேவை மூலம் அணுகலாம். இந்தப் பட்டியலில் இப்போது டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்குப் பூங்காக்களும் சேர்ந்துள்ளன.