

ஐ போனுக்குள் என்ன இருக்கு!
ஐ போன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகச்சிறந்த ஐபோனா? மற்ற ஸ்மார்ட்போன்களைவிட எந்தளவுக்குச் சிறந்தது என்றெல்லாம் சூடான விவாதம் அனல் பறக்கும் நிலையில் முதல் 3 நாட்களில் ஒரு கோடி புதிய போன்கள் விற்று தீர்ந்திருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முன்பதிவு மூலம் 40 லட்சம் ஆர்டர் கிடைத்ததாக ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. ஐபோன் மற்றும் ஐபோன் பிளஸ் இரண்டும் சேர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பத்து நாடுகளில் இந்த விற்பனை எண்ணிக்கையை தொட்டிருக்கிறது.
சீனாவும் சேர்ந்திருந்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிமாகி இருக்கும் என்று ஆப்பிள் ஃபாலோயர்ஸ் சொல்கின்றனர். கட்டுப்பாடு காரணங்களால் சீனாவில் இன்னும் ஐபோன் 6 அறிமுகமாகவில்லை.
ஐபோன் 6 இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. தீபாவளிக்கு முன் என்றும் நவம்பரில் வரலாம் என்றும் வெவ்வேறு தகவல்கள் உலவுகின்றன. மின் வணிக தளம் ஒன்று, ஐபோன் 6யை ரூ.99,999க்கு வாங்கலாம் எனக் கூறுகிறது.
ஐபோனில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று அறிய ஆர்வமா? ஐ பிக்ஸ் இட் இணையதளம் புதிய ஐபோனை அக்குவேறு அணி வேராகப் பிரித்துக் காட்டியிருக்கிறது. பார்க்க விரும்பினால் இந்த இணைப்பை க்ளிக் செய்தால் போதும்: https://www.ifixit.com/Teardown/iPhone+6+Plus+Teardown/29206