

இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனமான ஸ்மார்ட்லிங்க் நெட்வொர்க் சிஸ்டம் லிமிடெட் புதிதாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான டியூயல் பேண்ட் வயர்லெஸ் ரவுட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏசி 750 பிராட்பேண்ட் ரவுட்டர்கள் வீடுகள் மற்றும் சிறிய அலுவலகங்களுக்கு மிகவும் ஏற்றது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ் அளவைக் குறிக்கும் இரண்டு தனித்தனி குறிப்பான்கள் இதில் உள்ளன. இத்தகைய ரவுட்டர்கள் மூலம் அதிக விரைவான மிகப் பெரிய ஃபைல்களை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். ஃபயர்வால் பாதுகாப்பு உள்ளிட்ட பன்முக பாதுகாப்பு அம்சங்களை இது உள்ளடக்கியது. இதைக் கையாள்வது எளிது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.