தொழில்நுட்பம் புதிது: புதிய ஆண்டின் புதிய நுட்பம்

தொழில்நுட்பம் புதிது: புதிய ஆண்டின் புதிய நுட்பம்
Updated on
1 min read

2019-ம் ஆண்டில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பங்கள் எவை? ஸ்மார்ட் உதவியாளர் அல்லது டிஜிட்டல் உதவியாளர் சேவையில் அறிமுகமாக இருக்கும் தொழில்நுட்பங்களைத்தான் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக கார்களில், விரும்பிய வகையில் இசை கேட்க வழி செய்யும் வகையில் டிஜிட்டல் உதவியாளர் சேவைகள் மேம்படும் என்கின்றனர்.

 பயனாளிகளின் தனிப்பட்ட ரசனையைப் புரிந்து கொண்டு அவர்கள் விரும்பக்கூடிய இசையை ஒலிக்கச்செய்வதோடு, காரிலிருந்து வீட்டுக்கு, வீட்டிலிருந்து காருக்கு என்றும் இந்தச் சேவை சிக்கல் இல்லாமல் தொடரும் தன்மை யைக் கொண்டிருக்கும் என்கின்றனர்.

இதேபோல, டிவியைப் பொறுத்தவரை ‘8 கே’ தொழில்நுட்பம் அறிமுகமாக இருக்கிறது. தற்போதுள்ள ‘4 கே’ தொழில்நுட்பத்தைவிட இந்த நுட்பம் பல மடங்கு துல்லியமான காட்சியை அளிக்கக்கூடியது. ஏற்கெனவே, 4 கே நுட்பத்துக்கு ஏற்ற உள்ளடகத்தை அளிக்கவே தொலைக்காட்சி நிறுவனங்கள் திணறிக்கொண்டிருக்கின்றன. அதற்குள் 8 கே பாய்ச்சலா என்று மலைத்து நிற்கின்றன தொலைக் காட்சி நிறுவனங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in