தகவல் புதிது: கூகுளில் விளையாடத் தயாரா?

தகவல் புதிது: கூகுளில் விளையாடத் தயாரா?
Updated on
1 min read

தேடு இயந்திர நிறுவனமான கூகுள், 2018-ம் ஆண்டின் தேடல் போக்குகளை மையமாக வைத்து சுவாரசியமான இணைய விளையாட்டு ஒன்றை உருவாக்கியுள்ளது.

 ‘கேம் ஆஃப் த இயர் வித் கூகுள்’ எனும் இந்தத் தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வரிசை யாகப் பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் விளையாட்டு. கேள்விகள் எல்லாமே கூகுளில் 2018-ல் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் தொடர்பானவை. ஒவ்வொரு கேள்வியாக முன்னேறலாம். ஒவ்வொரு கேள்விக்கும் சரியான, தவறான பதில் முன் வைக்கப்படுகிறது. சரியான பதிலைச் சொன்னால் அதிகப் புள்ளிகள் பெறலாம்.

இந்த விளையாட்டின் போக்கில் கடந்த ஆண்டு இணையத்தில் எவற்றை எல்லாம் அதிகம் தேடியிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இந்த விளையாட்டை ஆடி முடித்த பின், மதிப்பெண் களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர் களையும் விளையாட அழைக்கலாம்.

விநாடி வினா போல, பின்னணிக் குரலோடு கேள்விகள் அமைந்திருப்பது இன்னொரு சுவாரசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in