

ஜியோமி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் ஒய் ஐ ஹோம் கேமரா 3. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இதை எங்கும் எளிதில் பொருத்தலாம். விலை ரூ.2,900.
வளையும் ஸ்மார்ட்போன்
சீன நிறுவனமான ராயல், உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஃபிளெக்சிபாய் எனப்படும் இந்த டேப்லெட்டை 2 லட்சம் முறை எந்தப் பக்கமும் வளைத்து மடிக்கலாம்.
ஸ்மார்ட் ‘கடிகாரம்’
லெனோவோ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் கடிகாரம், கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் நம்முடைய அன்றாட செயல்பாடுகளை, திட்டங்களை ஞாபகப்படுத்தக்கூடிய கடிகாரம். ஒரு மினி கம்ப்யூட்டர் என்றே சொல்லலாம்.
அமேசான் ‘ரிங்’
காலிங் பெல்லுக்குப் பதிலாக அமேசான் நிறுவனம் ‘ரிங்’ என்ற செக்யூரிட்டி கேமராவுடன் கூடிய ரிங் பெல் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வீடியோ ரெக்கார்டிங் வசதியும் உண்டு.