

முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கில் தினமும் 100 கோடி வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. இதில் 65 சதவீத வீடியோக்கள் மொபைல் போன் மூலமாக பார்க்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
உலகம் முழுக்க மாதத்துக்கு 132 கோடி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பேஸ்புக் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் 107 கோடி வாடிக்கையாளர்கள் மொபைல்போன் மூலமாக பயன்படுத்துவதாக பேஸ்புக் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சராசரியாக தினமும் 100 கோடி வீடியோக்கள் பேஸ்புக் மூலமாக பார்க்கப்படுகின்றன. பேஸ்புக்கில் வீடியோவாக பதிவேற்றம் செய்வது அதிகரித்துவருகிறது.