பொருள் புதுசு: லெஜண்டுகளின் ராகங்கள்

பொருள் புதுசு: லெஜண்டுகளின் ராகங்கள்
Updated on
1 min read

சரிகம கர்வான் சமீபத்தில் சரிகம கர்வான் மினி என்ற கைக்கு அடக்கமான மியூசிக் பிளேயரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இசை ஜாம்பவான்களான எம் எஸ் விஸ்வநாதன், டிகே ராமமூர்த்தி, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் பிரபலமான 351 தமிழ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புளூடூத், யுஎஸ்பி, எப்எம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. விலை ரூ.2490.

எலெக்ட்ரானிக் கமாண்டர்

லாகிடெக் நிறுவனத்தின் புதிய ஹார்மோனி எலைட் யுனிவர்சல் ரிமோட் மூலம் நம்மிடமுள்ள எல்லா எலெக்ட்ரானிக் பொருள்களையும் கட்டுப்படுத்த முடியும். தொடுதிரை வசதி உள்ள இந்த ரிமோட்டுடன் ஹார்மோனி ஹப் என்ற கருவியும் தரப்படுகிறது. இதன் வழியாக எலெக்ட்ரானிக் பொருள்களை இணைத்துக்கொள்ளலாம். இதன் விலை 350 டாலர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in