ஜெப்ரானிக்ஸின் புதிய வயர்லெஸ் இயர்போன்

ஜெப்ரானிக்ஸின் புதிய வயர்லெஸ் இயர்போன்
Updated on
1 min read

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப்-பீஸ் என்ற வயர்லெஸ் இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜெப்-பீஸ் ஒரு வயர்லெஸ் இயர்போன். ஸ்போர்டி தோற்றத்துடன் பளபளப்பு கூட்டப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது பிரத்யேகமாக பிறை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் ஒலிச்சிதறல் இல்லாது இயங்க கூடியது. காதுகளில் இருந்து நழுவி விழாது. இதன் எடை வெறும் 4 கிராம்கள் மட்டுமே.

இந்த இயர்போன் மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS கருவிகளுடன் இணைந்து தெளிவான குரல் சேவையை பெற முடியும். இரு கருவிகளின் ஊடாக எந்தவிதமான கேள்விகளையும் கேட்டு உடனடியாக பதில்களை  பெற்றுக்கொள்ள இயலும்.

இதோடு ரீசார்ஜபிள் பேட்டரி கேஸ் தரப்படுகிறது. அதில் இயர்போனை வைத்துவிட்டால் கூடுதலாக 6 மணிநேரம் பேட்டரிக்கான சார்ஜ் ஏறிவிடும். பேட்டரிகேஸும் சட்டைப்பையில் அடங்கிவிடும் அளவுக்கு சிறியதே.

இந்த இயர்போன்கள் கருப்பு நிறத்தில் ,இந்தியாவின் அனைத்து முண்ணனி மற்றும் சில்லறை விற்பனை கடைகளிலும் கிடைக்கும். விலை ரூ. 3,999

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in