Last Updated : 02 Apr, 2014 03:44 PM

 

Published : 02 Apr 2014 03:44 PM
Last Updated : 02 Apr 2014 03:44 PM

நாளைய உலகம்: உஷாரான கூகுள்

இணையத்தில் ஒரு முகவரியை கொடுக்கும் போது அதற்கு முன்பு http அல்லது https என்ற வார்த்தைகள் இருக்கும். இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுமென்றால் httpக்கு பதிலாக https (hyper text transfer protocol secure) முறையை இயக்கத்தில் வைத்திருப்பது நல்லது.

ஜிமெயில் போன்ற இணையதளங்களில் http முறை பயன்படுத்தினால் ஒருவர் கணக்கை அடுத்தவர் கைப்பற்றுகிற ‘ஸ்னூப்பிங்’ பிரச்னை எளிதில் நிகழ்ந்துவிடக்கூடும். இதை தடுப்பதற்காக கூகுள் தனது ஜிமெயில் இணையதளத்தை https முறையில் இயங்கும்படி மாற்றியுள்ளது. அதே போல் பயனருக்கும் கூகுள் செர்வருக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றங்களை மறையாக்க ( encryption) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x