கேட்ஜெட் புதிது: கிரெடிட் கார்டு சைசில் போன்!

கேட்ஜெட் புதிது: கிரெடிட் கார்டு சைசில் போன்!
Updated on
1 min read

ஒரு பக்கம் ஸ்மார்ட் போன்களில் திறனும் திரையும் பெரிதாகிக்கொண்டேவருகிறது. இந்நிலையில் கைக்கு அடக்கமான சைசில், லேசு ரக போன் ஒன்று ஜப்பானில் அறிமுகமாகியிருக்கிறது. 2.8 அங்குல டிஸ்பிளே கொண்ட இந்த போனின் மொத்த எடை 47 கிராம் மட்டுமே. போனின் தடிமன் 5.3 மி.மீ.தான்.

கிரெடிட் கார்டு அளவு இருக்கும் இந்த போன் உலகிலேயே மெல்லிய போன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 380mAh பேட்டரி மற்றும் 2.8 அங்குல  டிஸ்பிளே கொண்டிருக்கிறது.

இந்த போனில் 4 ஜி வசதி இருக்கிறதே தவிர, ஸ்மார்ட்போனில் காணக்கூடிய பெரும்பாலான அம்சங்கள் இல்லை. கேமரா, செயலிகளுக்கான ஆப் ஸ்டோர் இதில் இல்லை. ஜப்பானின் கேயோசேரா எனும் நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான என்.டி.டி. டொகோமோ இணைந்து இந்த போனை அறிமுகம் செய்துள்ளன.

குறைந்த அம்சங்கள் கொண்ட ‘மினிமலிஸ்ட்’ ரக போனாக உருவாக்கப்பட்டுள்ள இது வழக்கமான போனுக்கான துணை போனாகக் கருதப்படுகிறது. ஸ்மார்ட்போன் சார்ந்த கவனச்சிதறல்கள் இல்லாமல் போனை மட்டும் பயன்படுத்தும் சூழலில் இந்த போன் ஏற்றது. இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் ‘பாம்’ (Palm)  பிராண்டும் அதிக அம்சங்கள் இல்லாத சின்னஞ்சிறிய ஸ்மார்ட்போன் ஒன்றை அமெரிக்காவில் அறிமுகம் செய்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in