செயலி புதிது: ஆபத்துக் காலத்தில் உதவும் செயலி

செயலி புதிது: ஆபத்துக் காலத்தில் உதவும் செயலி
Updated on
1 min read

தனிநபர் பாதுகாப்பு நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் வரிசையில் வருகிறது ‘ஷேக்2சேப்டி’ செயலி. இந்தச் செயலியை நிறுவுவதன் மூலம், அவசர காலத்தில் உதவி தேவையெனில், போனை  ‘ஷேக்’ செய்வதன் மூலம் நெருங்கிய நபர்களுக்கு உதவி கோரிக்கை அனுப்பி வைக்கலாம். இருப்பிடம் பற்றிய தகவல், ஒளிப்படமும் அனுப்பி வைக்கப்படும். பவர் பட்டனை நான்கு முறை அழுத்துவதன் மூலம் இதை இயக்கலாம்.

செயலியை  நிறுவியவுடன் அவசர காலத்தில் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள், முதியவர்கள், சிறார்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கும். பேரிடர் காலங்களில் உதவி கோரவும் இந்தச் செயலி கைகொடுக்கும்.

மேலும் விவரங்களுக்கு: https://photonapps.wordpress.com/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in