Last Updated : 20 Nov, 2018 10:17 AM

 

Published : 20 Nov 2018 10:17 AM
Last Updated : 20 Nov 2018 10:17 AM

செயலி புதிது: யாஹுவின் செய்தி செயலி

யாஹு நிறுவனம் அண்மைக் காலமாகப் புதிய சேவைகளை அறிமுகம் செய்துவருகிறது. இந்த வரிசையில் இப்போது ‘வேக்கிங் நியூஸ்’ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தச் செயலி காலையில் கண் விழிக்க உதவும் அலாரம் வகையைச் சேர்ந்தது. இதில் ஒரு வித்தியாசமான அம்சமும் இருக்கிறது. இது அலாரம் ஒலி எழுப்புவதற்குப் பதில், அன்றைய தினச் செய்திச் சுருக்கங்களை ஒலிக்கச்செய்கிறது. பல்வேறு செய்தித் தளங்களிலிருந்து செய்தி சேவையைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் முதல் கட்டமாக அறிமுகம் ஆகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://in.yahoo.com/?p=us

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x