

ஜெப்ரானிக்ஸ் ‘ஆட்டம்’ என்ற சிறப்பு விளக்குடன் கூடிய ஒலிபெருக்கி வகையை அறிமுகம் செய்துள்ளது.
குழுவாக அமர்ந்து இசை கேட்க இந்த கருவி உதவுகிறது. 60 LED ஒளி விளக்குகளுடன் கூடிய இந்த ஒலிப்பெருக்கி, தீபம் போன்ற வடிவிலான ஒளியை வெளிப்படுத்துகிறது. விழாக்கள் என்றாலே அதில் இசை ஒரு இன்றியமையாத முக்கியமான அம்சம், ஆனால் அதனுடன் சிறிது ஒளியை சேர்க்கும் பொழுது இன்னும் சுவாரசியமாகிறது.
‘ஆட்டம்’ அப்படிப்பட்ட சூழ்நிலைக்கென்றே சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவீன வசதிகளுடன், இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி இரண்டு விதமான சலுகைகளுடன் வருகிறது, விருப்பப் பாடல்களை BT மூலம் வயர்லெஸ் முறையில் கேட்கலாம் அல்லது மைக்ரோ SD Card மூலம் கேட்கலாம். நடுப்புறத்தில் உள்ள பட்டன்கள் மூலம் பாடல் வரிசைகளை மாற்றலாம் அல்லது ஒலியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். மேலும் இதில் உள்ள விளக்கை இயக்க ஒரு பிரத்யேக சுவிட்ச் உள்ளது.
இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கிகள் கருப்பு நிறத்தில் இந்தியாவின் முன்னணி கடைகளில் முழுவதும் விற்பனையில் உள்ளது. விலை ரூ. 1699