

எத்னோடெக் நிறுவனத்தின் கேமரா பேக், புகைப்படம் தொடர்பான நிறைய பொருள்கள் வைத்தாலும், மிக அடக்கமாக உள்ளது. மார்டன் பேக் போல இருந்தாலும், வெளியில் கைத்தறியில் உருவான துணியால் அழகுபடுத்தியிருக்கிறார்கள்.
பக்கா ஹிடன் பெல்ட்
இந்த ஹிடன் பெல்ட் வித்தியாசமாகவும், வசதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான பெல்ட்டில் கச்சை வெளியில் நீண்டுகொண்டிருக்கும். ஆனால் இந்த ஹிடன் பெல்ட்டில் கச்சையை பெல்டுக்கு உட்புறத்திலேயே சொருகி மறைத்துக்கொள்ளலாம்.
பாக்கெட் ஷூ
இந்த கான்வாஸ் ஷூவை மடித்து பாக்கெட்டில் கூட வைத்துக்கொள்ளலாம் அந்தளவுக்கு மெல்லியதாக உள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தொழில்நுட்பம் கொண்ட இந்த கோர்சினி ஷூ, சாக்ஸ் இல்லாமல் போட்டாலும் கூட நாள் முழுக்க வாடை வராமல் இருக்குமாம்.
குப்பைகளை அகற்றும் சாட்டிலைட்
விண்வெளியில் இருக்கும் குப்பைகளை அகற்ற இங்கிலாந்தின் சர்ரே வின்வெளி மையம் சாட்டிலைட் ஒன்றை வடிவமைத்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகால விண்வெளி பயணத்தில் 7600 டன் குப்பைகள் வின்வெளியில் உருவாகியிருப்பாதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குப்பைகள் மணிக்கு 17500 மைல் வேகத்தில் பயணிப்பதால் வின்கலங்களுக்கும், விண்வெளி வீரர்களுக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்புள்ளதால், இவற்றை அகற்றும் வேலையை இந்த சாட்டிலைட் செய்கிறது.