பொருள் புதுசு: கையடக்க இருக்கை

பொருள் புதுசு: கையடக்க இருக்கை
Updated on
1 min read

தண்ணீர் பாட்டிலின் அளவில் கையில் எடுத்துசெல்லத்தக்க இருக்கையை வடிவமைத்திருக்கிறது அமெரிக்காவின் சான்டா பார்பரா பகுதியைச் சேர்ந்த கோ சேர் நிறுவனம். தரையிலிருந்து 10 அங்குலம் வரையிலான உயரத்தில் இந்த இருக்கையைப் பயன்படுத்தி அமர இயலும். 136 கிலோ கிராம் எடையைத் தாங்கக்கூடிய இந்த இருக்கையின் மொத்த எடை 1.3 கிலோ கிராம் மட்டுமே. தண்ணீர் மற்றும் பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாத வகையில் இந்த

சுத்தம் செய்யும் ஸ்பிரே

sprayjpg100 

பல நாட்களாக துவைக்காத துணிகளில் உள்ள பாக்டீரியாக்களைக் கொன்று, அசுத்தங்களை நீக்கி, நறுமணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு ஸ்பிரேவை உருவாக்கியிருக்கிறது தாய்லாந்தைச் சேர்ந்த அகடோம் நிறுவனம். துணி மட்டுமல்லாது ஷூக்கள், கார் சீட், தலையணை, துணிப் பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஸ்பிரே சுத்தம் செய்யும். நானோ தொழில்நுட்ப முறையில் செயல்படுகிறது. இந்த ஸ்பிரேவைத் தயாரிக்க தாய்லாந்தின் சுலலாங்கார்ன்  பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையுடன் அகடோம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in