பொருள் புதுசு: படுக்கை மேசை

பொருள் புதுசு: படுக்கை மேசை
Updated on
2 min read

படுக்கையில் இருந்துகொண்டே மடிக் கணினிகளை பயன்படுத்துவது, சாப்பிடுவது போன்றவை பெரும்பாலானவர்களின் பழக்கமாக இருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் ஒரு மேசையைத் தயாரித்திருக்கிறது பிரான்சை சேர்ந்த பெட் சில் நிறுவனம். மின்னணு பொருட்களை சார்ஜ் செய்யும் வசதியும் கொண்டது.

மின்னணு மெழுகுவர்த்தி

விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அலங்கரிக்கும் வகையில் மின்னணு மெழுகுவர்த்தியை அறிமுகம் செய்திருக்கிறது கலிபோர்னியாவின் லுயூடெலா நிறுவனம். ஜாஸ்மின், ஆப்பிள் சிடார் போன்ற பல்வேறு நறுமணங்களில் கிடைக்கிறது. எவ்வளவு நேரம் எரியவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.

நவீன பாட்டில்

பாட்டிலில் உள்ள திரவத்தை குடிக்கும்பொழுதோ அல்லது மூடியை திறக்கும்பொழுதோ கவனக்குறைவாக இருந்தால் திரவம் வீணாகிவிடுவதோடு ஆடைகளில் கறை படிதல், சூடான திரவம் மேலே விழுதல் என பல பாதிப்புகள் ஏற்படலாம். இதற்கு மாற்றாக ஒரு பாட்டிலை கண்டறிந்திருக்கிறார் கலிபோர்னியாவை சேர்ந்த பிரெட்ரிக் கிராஃப்ட். நமது உதடுகள் பட்டால் மட்டுமே இந்த பாட்டிலில் இருந்து நீர் வெளியேறும். உதடுகளை விலக்கியதும் பாட்டில் மூடிக்கொள்ளும். தனியாக திறந்துமூடும் தேவை கிடையாது.  இந்த பாட்டிலுக்கு லிட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மிதவை ஓடு

3 முதல் 6 வயது வரையான குழந்தைகள் எளிதில் நீச்சல் கற்றுக்கொள்ளும் வகையில் ஆமை ஓடு மாதிரியிலான கருவியை வடிவமைத்திருக்கிறார் பிரிட்டனின் எடின்பர்க் நகரைச் சேர்ந்த சேர்ந்த மைக்கேல் ஹார்கின்ஸ். இந்தக் கருவியை அணிந்துகொள்வதன் மூலம் எந்தத் தடையும் இன்றி இயல்பாக கைகளை வீசி நீந்தமுடியும், உடலை சரியான நிலையில் வைத்திருக்க முடியும் என்கிறார் ஹார்கின்ஸ். தி ஸ்காட்டிஷ் எஸ்எம்இ பிஸினஸ் அவார்ட், இன்னோவேஷன் லாஞ்ச்பேட் உள்ளிட்ட விருதுகளோடு விர்ஜின் குழும நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சனின் பாராட்டையும் பெற்றிருக்கிறது இந்தக் கருவி. டர்டில் பாக் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in