

குறும்பதிவு சேவையான ட்விட்டர், மந்தமான இணைய இணைப்பிலும் செயல்படக்கூடிய ட்விட்டர் லைட் செயலியை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விரிவாக்கியுள்ளது.
ட்விட்டர் 280 எழுத்துக்களில் குறும்பதிவுகளைப் பகிர வழி செய்கிறது. இந்தச் சேவையைச் செயலி வடிவிலும் பயன்படுத்தலாம். இதனிடையே மந்தமான இணைய இணைப்பிலும் செயல்படக்கூடிய ‘ட்விட்டர் லைட்’ எனும் செயலியைக் கடந்த ஆண்டு இறுதியில் ட்விட்டர் அறிமுகம் செய்தது.
தற்போது இந்தச் செயலி இந்தியா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகமாகியுள்ளது. 2ஜி, 3ஜி இணைப்புகளில் சிறப்பாகச் செயல்படக்கூடிய இந்தச் செயலி வேகமாகவும் தரவிறக்கம் ஆகும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.