

நேரத்தை எழுத்துவடிவில் காட்டும் வித்தியாசமான கடிகாரம். பின்புற வண்ணத்தை மாற்றிக் கொள்ளுதல், நேரத்தை சத்தமாக படித்துக் காட்டுதல், அலாரம் போன்ற வசதிகளைக் கொண்டது. லண்டனை சேர்ந்த லெட்பீ நிறுவனம் தயாரித்துள்ளது.
கையடக்க தொட்டில்
வெளியிடங்களுக்குச் செல்லும்போது குழந்தைகளை தூங்க வைப்பதில் எழும் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கையடக்க தொட்டில். குழந்தைகளை கண்காணிப்பதற்கான கேமிரா வசதியும் கொண்டது. ஸ்லம்பர்பாட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பறக்கும் செல்ஃபி கேமிரா
ஹோவர் நிறுவனத்தின் பறக்கும் கேமிரா சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கையடக்க கருவியின் மூலம் 12 எம்பி தரத்திலான புகைப்படங்களையும் 4கே தரத்திலான வீடியோக்களையும் எடுக்கமுடியும். நமது புகைப்படத்தை ஒருமுறை பதிவு செய்வதன் மூலம் வெளியிடங்களில் நம்மை சரியாக அடையாளம் கண்டுகொண்டு ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் திறன் கொண்டது. தலைக்கு மேலே 20 மீட்டர்வரை பறக்கக்கூடியது. 242 கிராம் எடை கொண்ட இந்த கேமிராவுக்கு ஹோவர் கேமிரா பாஸ்போர்ட் ட்ரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
4 திரை ஃபோன்
ஹாங்காங்கைச் சேர்ந்த ட்யூரிங் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 4 திரைகளைக் கொண்ட ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. 5ஜி முறையில் இயங்கும் இந்த ஃபோனை குரல் வழி கட்டளைகள் மூலமும் இயக்கமுடியும். பிரபலமான ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கியை மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபோனுக்கு ஹப்பிள் ஃபோன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 3டி முறையில் குறுந்தகவல்கள் அனுப்பும் வசதி கொண்ட இந்த ஃபோன் 2020-ம் ஆண்டு சந்தைக்கு வர இருக்கிறது.