

சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ‘ஃபேஸ்புக் டிஜிட்டல் லைப்ரரி’ எனும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தனியுரிமைப் பாதுகாப்பு (பிரைவஸி), இணையத்தில் அடையாளம், ஆன்லைன் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பாடங்கள் அமைந்துள்ளன. விளக்க வழிகாட்டி, வீடியோ வடிவில் இவை அமைந்துள்ளன. இந்தப் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் 45 மொழிகளில் இதை அளிக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இளம் பயனாளிகள் இணையத்தில் கவனமாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வழிகாட்டும் வகையில் இந்தப் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தகவல்களுக்கு: https://www.facebook.com/safety/educators/