தகவல் புதிது: மியூசியம் உருவாக்கிய மீம்

தகவல் புதிது: மியூசியம் உருவாக்கிய மீம்
Updated on
1 min read

இணையம் எங்கும் நிறைந்திருக்கும் மீம்களைக் கேலிக்கும் கிண்டலுக்கும் தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை, விழிப்புணர்வு நோக்கிலும் பயன்படுத்தலாம். அதனால்தான், அண்மையில் மியூசியம் காப்பாளர்கள், விதவிதமான மீம்களை உருவாக்கி கலக்கி இருக்கின்றனர். கடந்த 22-ம் தேதி மியூசியம் மீம் தினமாகக் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, மியூசியக் காப்பாளர்கள், மியூசியத்திலிருக்கும் காட்சிப்பொருட்கள் தொடர்பான மீம்களை உருவாக்கி, #MusMeme எனும் ஹாஷ்டேகுடன் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டனர். அந்தக் கால கலைப்பொருட்கள் மற்றும் மியூசியத்தில் பார்க்கக்கூடிய பொருட்கள் அருகே இக்கால மீம்கள் பாணியில் வாசகங்களை எழுதி பகிர்ந்துகொண்ட இந்தப் படைப்புகளுக்கு ட்விட்டரில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த மீம்கள், ரசிக்கத்தக்கவையாக இருந்ததோடு, அருங்காட்சியகங்கள் மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in