Last Updated : 01 Aug, 2018 12:51 PM

 

Published : 01 Aug 2018 12:51 PM
Last Updated : 01 Aug 2018 12:51 PM

செயலி புதிது: கூகுள் நியூஸின் புதிய வடிவம்

கூகுள் நிறுவனம் ‘கூகுள் நியூஸ்’ சேவையை வழங்கிவருவது தெரிந்த செய்திதான். அண்மையில் கூகுள் இந்தச் செயலியைப் புதுப்பித்துள்ளது. புதிய வடிவம், பயனுள்ள மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. செயலியைத் திறந்தும் வரிசையாகச் செய்திகள் தோன்றுகின்றன. விருப்பத்துக்கு ஏற்ப செய்திகளை அமைக்கலாம். புதிய பயனாளிகள் என்றால், இதற்கான தேர்வு வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செய்தியின் மூல தளங்களும் அடையாளம் காட்டப்படுகின்றன. குறிப்பிட்ட தலைப்பில் பொருத்தமான செய்திகளைத் தேடி கண்டறிவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்திக்கான தலைப்பின் கீழே சிவப்பு மற்றும் நீல நிற ஐகான்கள் இருக்கும். அதை கிளிக் செய்தால் தொடர்புடைய செய்திகளை அறியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x