Published : 20 Aug 2018 03:30 PM
Last Updated : 20 Aug 2018 03:30 PM

விளக்கு போன்ற வயர்லெஸ் ஸ்பீக்கர்: ஸீப்ரானிக்ஸ் அறிமுகம்

ஸீப்ரானிக்ஸ் நிறுவனம் ‘Prism’ என்கிற புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.

முழுவதும் மென்மையான பூச்சுடன் ஒரு விளக்கு போல இந்த ஸ்பீக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது. கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகளுடன் RGB LED விளக்கும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. சுலபமாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலும் இதில் கைப்பிடி உள்ளது.

Prism1 prjpg

தானியங்கியாகவும் இயங்கும் இதன் led விளக்குகள் கேட்பவர்களது மனநிலைக்கு ஏற்றவாறு வண்ணத்துடன் ஒளிரும்.  இந்த LED நிறத்தை டச் முறையில் மாற்றலாம். Prism கெப்பாசிட்டிவ் டச் கட்டுப்பாடுகள் இருப்பதால், விளக்குக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த மென்மையான தொடுதலே போதுமானது. ஒலியளவையும் மெதுவான ஸ்பரிசத்தில் அதிகரிக்கவும்/ குறைக்கவும் செய்யலாம்.

வயர்லெஸ் விருப்பம் மூலம், உங்கள் பாடல்களை மொபைலில் கேட்கலாம். மைக்ரோ SD கார்டு மூலமாகப் பாடல்களை இயக்கலாம் அல்லது பிளேலிஸ்ட்டைக் கேட்க AUX கேபிளை பயன்படுத்தலாம். உள் அமைக்கப்பட்ட FM ரேடியோ வசதியும் கொண்டது.

இந்த ஸ்பீக்கரின் விலை ரூ. 2,499

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x