

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதை ப்ரீமியம் மாடல் போனாக சந்தையில் வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் 15 போன் அறிமுகமாகி உள்ளது.
இந்த போனின் டிஸ்பிளே, ப்ராசஸர் உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங்கின் போது ஸ்மார்ட்போன்கள் சூடாவது உண்டு. அதை தடுக்கும் வகையில் 360 கிரையோ-வெலாசிட்டி கூலிங் சிஸ்டம் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. ஒன்பிளஸ் 15 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?