

உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகளை செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்துசெல்வது கடினமான காரியம். இதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த கையடக்க கருவி. 300-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சிகளை செய்ய உதவும். மோன்கி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில்
நாம் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரத்தை சிறிய விளக்கை மின்னச் செய்வதன் மூலம் நினைவூட்டும் தண்ணீர் பாட்டில். ஸ்மார்ட் ஃபோனுடன் இணைத்துப் பயன்படுத்தலாம். ஈக்வா என பெயரிடப்பட்டுள்ளது.
சிறிய லேசர் அளப்பான்
வீட்டின் உட்புறத்தை வடிவமைப்பவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ஏற்ற கருவி. 40 மீட்டர் வரையிலான தூரத்தை அளக்க முடியும். ஹாங்காங்கின் மை ஆன்டெனா டெக் நிறுவனத் தயாரிப்புக்கு பி1 எஸ் என பெயரிடப்பட்டுள்ளது.