

இந்த நவீன இணைய உலகில் எப்படி மோசடி நடக்கும் என்பதை ஊகிக்கவே முடியாது. ஆனால், நாம் செய்கிற சிறு சிறு தவறுகளையும், அஜாக்கிரதையாக நடந்து கொள்வதையும் தவிர்ப்பதன் மூலம் சில இணைய மோசடிகளைத் தடுக்கவோ தவிர்த்துக்கொள்ளவோ முடியும். அப்படி நடந்தேறிய ஒரு மோசடியைப் பற்றித் தெரிந்துகொள்வதும் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.
இன்றைய உலகில் இணையம் மூலம் தேவையான பொருட்களை வாங்கும் போக்கு அதிகரித்துவிட்டது. மாதந்தோறும் பயன்படுத்தும் மளிகைப் பொருட்களைக்கூட இணையத்தில் வாங்குவோர் அதிகரித்துவிட்டனர்.