

இன்று தொழில்நுட்பம் பெருகிவிட்டது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வருகைக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் உண்மையா, பொய்யா என்று கண்டறிய முடியாத அளவுக்குச் சவாலாகி வருகின்றன. இன்று சைபர் திருடர்கள், அதையும் கையில் எடுத்துக் குற்றங்களைப் புரியத் தொடங்கியிருக்கின்றனர். அதில், சென்னையில் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட கதை மற்றவர்களுக்குப் பாடம்.
வடகிழக்கு மாநிலம் ஒன்றைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னையில் சிகை திருத்தும் வேலை செய்துவருகிறார். வீட்டிலிருந்து வேலைக்கு வருவதற்கும் மீண்டும் வீட்டுக்குச் செல்வதற்கும் இன்று பிரபலமாகி யிருக்கும் பைக் கால் டாக்ஸியை அந்தப் பெண் பயன்படுத்தியிருக்கிறார்.