

‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்பது பழமொழி. கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏ.ஐ) வளர்ந்திருக்கும் இந்தக் காலம்வரை இப்பழமொழி பொருந்திப்போகிறது. அதற்கு இந்த நிகழ்வே ஓர் உதாரணம்.
நடந்தது என்ன? - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சுற்றுலா கிளம்பிய ஜோடி ஒன்று, ரம்மியமான இயற்கை அழகால் சூழப்பட்ட ஓர் இடத்தைப் பார்க்க 3 மணி நேரம், 300 கிலோமீட்டர் பயணம் செய்தது. பேராக் எனும் பகுதியை அடைந்த சுற்றுலாப் பயணிகளால் அவர்கள் தேடிச் சென்ற அந்த இடத்தைப் பார்க்க முடியவில்லை. எங்கு தேடியும் அந்த இடத்தைச் சென்றடைவதற்கான வழித்தடங்களே இல்லை என்பதைப் புரிந்துகொண்ட அவர்கள், அப்படி ஓர் இடமே இல்லை என்பதை இறுதியில் கண்டறிந்தனர்.